திருச்சி மாவட்டம் பெல்ஸ் கிரவுண்டில் அமைந்திருக்கும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5-ம் தேதி முகூர்த்தக்கால் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

மேலும் 13-ஆம் தேதி காவேரி தென்கரையிலிருந்து அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு திருமஞ்சனம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் மாலை முதல்கால யாகபூஜை தொடங்கியது. 14ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது.

15ஆம் தேதி நான்காம் கால யாக பூஜையுடன் மஹா பூர்ணாஹீதி தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகா அன்னதான நடைபெற்றது அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

