ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றது. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் (ஃபர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, அதிகளவில் புகை எழும்பும். இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் தயாராகியுள்ளது.
ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியிலும் எல்இடி பல்புகளும் உள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜின் ரூ. 9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி துவங்கி 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர். இந்த என்ஜின்இயக் கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது…