தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடத்தெரு மற்றும் காலணி ஆகிய இடங்களில் உள்ள குடோன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் மற்றும் பாலக்கரை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் சோதனையை தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய்
மதிப்பிலான 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பூமிநாதன், இளங்கோ, வடிவேல் ஹரிஹரன், பழனி குமார் ஆகிய 5 நபர்களையும் 3 பிரிவுகரில் வழக்குப் பதிந்து கைது செய்து அவர்கள் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர (Tata Ace ) வாகனமும் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது….