திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் பயண் பெரும் வகையில் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திருச்சி சாலை ரோட்டில் பழைய கோஹினூர் திரையரங்கம் எதிர்புரம் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் கூட்டரங்கில் நடைபெற்றது இம் முகாமினை திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரமேஷ் டாக்டர் மீனாகுமாரி ஆகியோரின் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு இம்முகாமிற்க்கு வருகைபுரிந்த பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இம்மருத்துவ முகாமினை நகைகடை முதன்மை செயல் அலுவலர் விஸ்வ நாராயன் தொடங்கி வைத்தார். முகாமில் முதன் முறையாக வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன கருவிகள் கொண்டு கருவிழியில் வெளித்தன்மை துல்லியமாக கணக்கிடுதல் கண்ணில் பொருத்திடும் லென்சின் பவரை கணக்கிடுதல் கருவிழியின் தடிமன் அளவு கண்புரையின் தடிமன் அளவு என பல்வேறு விதமான கண் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவர்கள் இம்முகாமிற்க்கு வருகை புரிந்த பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் ஆண்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனைகளை செய்து கொண்டனர். இம் முகாமில் பரிசோதனை செய்து கொண்டதில் 40 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையின் சார்பில் செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ. தாமஸ் தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகா அல்லிகெடி அனுஷ்மா நந்தினி மைக்கேல் ஷேக் அப்துல்லா பார்த்திபன் கார்திகேயன் மணி சுந்தர் சரண் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு இம் முகாமிற்கு வருகை புரிந்த பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர் மேலும் சமூக ஆர்வலர் நாசிய தலைமையில் கணேஷ் எடல் பிராங்க்ளின் அப்துல் ஹக்கீம் கார்த்தி ரோஷினி சுபாஷினி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்*