தமிழ்நாட்டில் தஞ்சமாக அடைந்த அகதிகளானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்ற குற்றத்திற்காக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வெளிநாட்டவர் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் கடல் வழியாக இங்கே வந்த ஈழத்தமிழர்கள் இங்கு உள்ளனர். மேலும் வழக்குகளை முடித்தவர்கள் பல மாதங்களாக விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தங்களின் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ வேண்டும் என்பதற்காக திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் 10-பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே மாதம் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 7-ம் நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் 1.கபில், 2.டெனிசன், 3.கொண்பூசஸ், 4.எப்ஸிபன், 5.தினேஷ், 6.டீலக்ஸ் ஆகிய 6-பேர் திடீரென மயங்கி விழுந்தனர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இந்த ஆறு ஈழத்தமிழர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.