திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள அமைச்சர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ், கருணாநிதி, தொகுதி பொறுப்பாளர்கள் சந்திரசேகர் உத்ராபதி செல்வம் பொருளாளர் துரைராஜ், வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் டோல்கேட் சுப்பிரமணி கிராப்பட்டி செல்வம், பகுதி செயலாளர்கள் இளங்கோ, கமல் முஸ்தபா நாகராஜ் கனகராஜ் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, சோழன் சம்பத் முத்து பழனி உத்தமர் சீவி ராஜேந்திரன் கலை மலைக்கோட்டை பந்தல் ராமு சதீஷ், எம்ஆர் எஸ் குமார் தஸ்தகீர் மற்றும் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.