தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார் அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் கே நேருக்கு ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.
அதன்படி தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர் அகமத் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் கே என் நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.