திருச்சி மாநகரம் உறையூரில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை சோதனை முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து சுகாதார மையத்தினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மூலம்காசநோய் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காசநோய் குறித்த சிறப்பு முகாம் மற்றும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அமைச்சர் கே என் நேரு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே என் நேரு:- மழை பெய்த மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் விரைவில் நிறைவடையும் எந்த வித குறையும் இன்றி அணைத்து விதமான பணிகளையும் முழுமையாக நிறைவு செய்து திறக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது உங்களுக்கு முன்னதாக பணிகள் நிறைவடையும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *