தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா சிறப்பு கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 23 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் படிப்பகம் அருகே பகுதி சபா சிறப்பு கூட்டம் 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குடிநீர் வழங்கள், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழை நீர் வடிதல் பராமரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், பூங்கா பராமரிப்பு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மேம்படுத்துதல், மாநகராட்சி பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனை மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பகுதி சபா சிறப்பு கூட்டத்திற்கு 23 வது வார்டு பொதுமக்கள் குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் விஜய், மாநகராட்சி வருவாய் உதவியாளர் ராமமூர்த்தி, மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
