திருச்சி மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு இடங்களில் சாலைகள் போடாமல் பொதுமக்கள் அவதி அடைவதாகவும் உடனடியாக சாலைகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு நகர பொறியாளர் சிவவாதம் மண்டல தலைவர்கள் நாம் என்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஒன்றிய செயற்பொறியாளர் உதவி செயல் பொறியாளர்கள் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.