இந்திய 73வது குடியரசு தினத்தையொட்டி திருச்சி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், மற்றும் நீதிபதிகள், வழக் கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த 73 ஆவது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் ஏற்றி வைத்தார்.
73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் தேசிய கொடியை கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயராணி ஏற்றி வைத்தார்.
73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பண்டையகால நாணயங்கள் சேகரிப்போர் சார்பில் பழைய 1, 2 மற்றும் 5 பைசா நாணயங்களை கொண்டு குணசேகரன் என்பவர் இந்திய தேசியக் கொடி வடிவமைத்துள்ளார்.
73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் தேசியக்கொடியை இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ் நாடு மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம் சரவணன் ஏற்றி வைத்தார்.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 73 வது குடியரசு தின விழாவில் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தியாகராஜன், தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் தனலெட்சுமி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினார்.
வாசன் நகர் குடியிருப்போர் பொதுநல நலச் சங்கத்தின் சார்பில் 73வது குடியரசு தின விழா வாசன் நகர் 7வது கிராஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. நலச் சங்கத்தின் தலைவர் கலைச்செழியன் தலைமையில் நாச்சிகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.