திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 இலகு ரக (LMV) மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 8 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 10.02.2022-ம்தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 03.02.2022 மற்றும் 09.02.2022-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 10.02.2022-ம்தேதி காலை 8 மணிமுதல் 10 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% முழு தொகையையும்) செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *