தமிழ்நாடு வீடியோ போட்டோ கிராபர் அசோசியேசன் மாநில சங்கத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் 2023 முதல் 2025-ம் ஆண்டு சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது.

இதில் தலைமை தேர்தல் அதிகாரி பாரூக் தலைமையில் தேர்தல் குழுவினர் திருச்சி மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தினர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் 1500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதில் திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக ஆதி.சரவணன், மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரம்ஜான் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் மகேஷ், ஆனந்த் மாவட்ட இணைச் செயலாளர்கள் அருண்குமார், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்