தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இப்போது மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி 26 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வண்ணாரப் பேட்டை, ஹவுசிங் யூனிட், திடீர் நகர், எம்ஜிஆர் நகர், பாரதி நகர், கள்ளங்காடு, சீனிவாசன் நகர், குமரன் நகர் மற்றும் பேங்கர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அருகில் பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *