நேற்று புது தில்லி, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, இன்று மாலை தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி, அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்த் யாதவ் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி RPF ஆய்வாளர் Ajay குமார், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன்,

ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் தலைமையில், இன்று மாலை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, சப் இன்ஸ்பெக்டர் குருநாதன், தலைமைக் காவலர் பேட்சிநாதன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு கணேசன் & இளையராஜா & உதவி ஆய்வாளர் / ரயில்வே போலீஸ் மற்றும் மோப்பநாய் ராக்கி உதவியுடன் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறை, ரயில் நிலைய வாயிலில் பயணிகள் எடுத்து வரும் பைகளை சோதனை செய்தும் ரயில் உள்ளே சென்று அமர்ந்திருந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தும் மோப்பநாய் உதவியோடு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முழுவதும் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.
