திருச்சி பொன் நகர் பகுதியில் உள்ள ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளியில் “அ”என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய “வித்யாரம்பம்” நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் கடந்த 9 நாட்களாக நவராத்திரி பண்டிகை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்ட கொலுவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .
அதன் ஒரு பகுதியாக இன்று விஜயதசமியை முன்னிட்டு இந்த ஆண்டு புதிதாக பள்ளிக்கு வந்த 45 குழந்தைகளுக்கு விஜயதசமியை முன்னிட்டு
பெற்றோர் மடியில் அமர வைத்து அ என்னும் தமிழின் முதல் எழுத்து கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரதநாட்டியம், பப்பட் ஷோ, செல்ஃபி கார்னர், வீட்டில் வளர்க்கக்கூடிய பூனை, முயல், எலி உள்ளிட்ட விலங்குகளும், கிளி, புறா, லவ் பேர்ட்ஸ் போன்ற , பறவைகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது. அதேபோல் தமிழர்களின் கலாச்சாரம் குறித்த கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளி செயலர் ரகுநாதன் அவர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார். அருகில் பள்ளி தலைமையாசிரியர் ருக்மணி சீனிவாசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். மேலும் விஜயதசமி பண்டிகையை பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகளுடன் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து கோலாகலமாக கொண்டாடினர்.