திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழப்பெருங்கலூர் ஊராட்சியில் அருள்மிகு சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் தமிழ்நாடு முழுவதும் 13 சமுதாய மக்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் வழிபாட்டு வருகின்றனர். ஒரு கால பூஜை நடைபெறும் இக் கோயிலில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பூசாரியாக இருந்து பூஜை செய்தது வருகிறார். இந்நிலையில் தினசரி காலை 7 மணிக்கு கோயில் நடை திறந்து இரவு எட்டு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 28ஆம் தேதி குடிப்பாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து 50க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி மிகப்பெரிய அளவில் விருந்து மற்றும் நேர்த்திக்கடன் செலுத்திய வருகின்றனர்.

   கோயில் உள்ளே இருந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர். கோயிலில் நட்டு வைத்திருந்த இரும்பு வேல்யை பிடுங்கி எடுத்து உண்டிகளை உடைத்து கோயிலில் பக்தர்கள் செலுத்திய இந்த காணிக்கைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர் .இது குறித்து லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி லால்குடி அருகே நன்னிமங்கலம் காளியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்கள் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் நோட்டமிட்டு திருடுவது அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து பணிகளை சற்று துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்