திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எசனக்கோரை, வளவனூர்,திருமண மேடு, பச்சாம்பேட்டை, மயில்அரங்கம், பெரியவர்சீலி, பொக்கட்டக்குடி, மேலவாளை, இடையேற்றுமங்கலம், கூகூர், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது தெற்கு அய்யன்வாய்க்கால். இப்பகுதி விவசாயிகளுக்கு பிரதான பாசன வாய்க்காளாக திகழ்கிறது. தெற்கு அய்யன் வாய்க்கால் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜாம்பேரி சங்க தேர்தல் நடைபெற்றது.
முதன்முறையாக வெளிப்படைத் தன்மையாக தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தேர்தலில் தங்கமணி பல்பு சின்னத்திலும், ஏஞ்சல் ஞானயோதயம் வில் அம்பு சின்னத்திலும் என இரண்டு பேர் போட்டியிட்டனர். இடையாற்று மங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் 241 வாக்குகள் பதிவான நிலையில் ஏஞ்சல் ஞானோதயம் 120 வாக்குகளும்,தங்கமணி 118 வாக்குகளும் பெற்றனர் இதில் மூன்று வாக்குகள் செல்லாத வாக்குகள். இதில் ஏஞ்சல் ஞானோதயம் 120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.