திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் ஊராட்சியில் குக்கிராம்மான கட்டால் பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பூனாம்பாளையம் வடக்கிப் பட்டியிலிருந்து கொள்ளிடம் பிரிவு வாய்க்காலில் குடிநீர் நீரேற்றுக் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்நனர். இதையடுத்து கடந்த 1 1/2 ஆண்டு முன்பு கட்டாள் பகுதியில் புதிதாக குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் நீர் தேக்க தொட்டியில் ஏற்றி கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்தனர்.
ஆனால் தற்போது சுமார் 52 நாட்களுக்கு மேலாக எந்த குடிநீரும் வழங்காததால் போர் தண்ணீர் குடித்து வருவதாகவும் மேலும் இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.எனவே இது சம்பந்தமாக பூனாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரை அணுகி கேட்கும்போது கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லை , ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லையென்று அலட்சியமாக கூறிவருகிறார்.
இந்நிலையில் இன்று காலை ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூனாம்பாளையம் கட்டால் பகுதிக்கு உரிய குடிநீர் வழங்க உரிய் நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் உள்ள பூனாம்பாளையம் பட்டறை முடக்கு சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு பேருந்துகளை சிறைப்பிடித்தனர். இதனால் மண்ணச்சநல்லூர் துறையூர் நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.