தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்வர் டெல்டா மாவட்டம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கொடுத்தவர். தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.
நிச்சயமாக வெகுவிரைவில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் அமைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினம். யாரேனும் நிலத்தை தாமாக முன்வந்து கொடுக்க வந்தால் மிகவும் சந்தோஷம். சிறிய அளவிலான விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.