உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது..ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மாண்டமான கோவில் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடு முழுவதும் மக்கள் பலர் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்..

இந்த நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதும் அயோத்தி ராமரின் குல தெய்வமான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி 20 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார் .அவருக்கு தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி காட்டும் போராட்டம்‌ அல்லது உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்ய போவதாக தகவல் வெளியானது. இதற்கு அனுமதி கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க அய்யாக்கண்ணு இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செல்ல முடியாதபடி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவரது வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளார். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், துணை ஆணையரே இங்கு வந்து உங்கள் மனுவை பெற்றுக்கொள்வார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.. இது குறித்து விவசாயி அய்யாக்கண்ணு கூறியதாவது:

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். எனவே பிரதமர் மோடி திருச்சி வரும்போது அவரை கண்டித்து கருப்புக்கொடி காட்டவோ, அல்லது உண்ணாவிரதம் இருக்கவோ அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க செல்லும்போது என்னை தடுத்து வீட்டுச்சிறையில் வைத்து உள்ளனர்‌ எந்த அடக்குமுறை வந்தாலும் தடையை மீறி 20 தேதி போராட்டம் நடத்துவோம் என‌ இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்