நாடு முழுவதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா டோன்ஸ் பிங்க் என்ற அமைப்பு சார்பில் ரோட்டரி சங்கம், சர்வதேச விமான நிலையம், உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகளையும் சங்கங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று முதல் வருகின்ற டிசம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், ரோட்டரி சங்க கவர்னர் ஜெரால்ட், ஏஎம்கே ஸ்டீல் உரிமையாளர் நசீமா பாரிக், ரத்னா குளோபல் மருத்துவமனை மருத்துவர் பிரியா பிரவீன் , பிரியா லொரைன் மொரைசிட்டி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டு செல்லும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் நிறுவனர் ஆனந்தகுமார், துணைத்தலைவர் வினோ ஹாசன், செயல் அலுவலர் சங்கீதா பழனி, ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் எல்சிஏ எண்டர்டைன்மென்ட் ரபீக் உள்ளிட்டோர் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.