திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 9 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. பயணிக்கும் இரண்டு சதவீத பயணிகளை மட்டும் இன்று முதல் கோவிட் பிஎப் 97 வகை வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தவர்கள் மற்றும் சோதனை நடத்தக்கூடியவர்கள் பட்டியலை விமான நிலைய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கொடுக்க உள்ளனர். BF.7 வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரண்டு சதவீதம் என்பது சுமாராக 20 வெளிநாட்டு பயணிகளிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும்.
துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் மதியம் 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த 151 பயணிகளில் 4 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆர்.டி.பிசி.ஆர் சோதனையில் மருத்துவர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு விமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச நாடுகளில் பயணம் செய்த பயணிகளின் 2% பட்டியல்களை அளிப்பார்கள்.