திருச்சி, சோமரசம்பேட்டை அருகிலுள்ள வீரங்கநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ தென்னவெட்டை கருப்புசாமி, ஸ்ரீ பிடாரி அம்மன் ஆகிய தேவதைகள் ஆலய ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
முன்னதாக 6-ம் தேதி காவேரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம், மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி முதல் கால மஹாபூர்ணஹீதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால மஹாபூர்ணஹீதி பூஜையும், மாலையில் மூன்றாம் கால மஹாபூர்ணஹீதி பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பத்தில் இன்று காலை 9.15 முதல் 10 .30 மணி அளவில் யாகசாலையில் இருந்து பூஜை செய்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இன்று மாலை 7 மணிக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகன் பங்குபெறும் திருச்சி இளையராஜா வழங்கும் M.S இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.