ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி ” பிங் அக்டோபர் ” மாதம் என WHO அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது . அதன் பகுதியாக திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பாக துவங்கியது.
இப்பேரணியை திருச்சி காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். ஹர்ஷமித்ரா மருத்துவமனை இயக்குனர்கள் கோவிந்தராஜ் மற்றும் சசிபிரியா கோவிந்தராஜ் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது திருச்சி பெரியார் சிலையிலிருந்து துவங்கி ஜென்னிஸ் ஹோட்டல் வழியாக திருச்சி புகைவண்டி நிலைய ரவுண்டனா மற்றும் பெரிய மிளகு பாறை வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்வில் செர்வெயிட் செயர் கல்லூரி மாணவிகளின் புற்றுநோயை பாமரமக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் நாடகம் வாயிலாக நடித்துக்காட்டினர் . பெரியார் மருந்தியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 150 பேர் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.