அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலருமான அரவிந்தன் ஏற்பாட்டில் திருச்சி பாபு ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்வின் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.