திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவகர்லால் நேரு தனது வார்டுக்குட்பட்ட மரக்கடை, சின்ன செட்டி தெரு, பெரிய செட்டி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
20-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜவகர்லால் நேரு பொதுமக்கள் மத்தியில் பேசும்போது.
இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே எனது லட்சியம் என்றும், அதிமுக ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது அந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மக்கள் துயரப்படுகிறார்கள்.
திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மத்திய மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். மேலும் தங்குதடையின்றி சீரான தண்ணீர் வினியோகம் நாம் பகுதியில் உறுதிசெய்யப்படும்.
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீட்டு வாசலிலேயே வந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். மக்கள் எந்நேரமும் என்னை சந்திக்கலாம் எனது லட்சியமே நமது வார்டு முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுதான். மக்கள் பாராட்டும் விதமாக எனது பணி அமையும் என்றார்.
எனது தந்தையும், முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது வழியில் நான் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை தொடர்ந்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
அவருடன் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா, வட்ட செயலாளர்கள் என் டி தியாகராஜன், கேபி கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.