திருச்சி சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் மாபெரும் பொது மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

இந்த மருத்துவ முகாமில் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவம், இதய மருத்துவம், பொது மருத்துவம், சிறுநீரக மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், எலும்பு அறுவை சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்,

 எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவம், தோல் மருத்துவம், பல் மற்றும் கண் பரிசோதனை முகாம் மற்றும் சி டி ஸ்கேன் பரிசோதனை ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த முகாமில் 23 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை சிகிச்சை பெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்