திருச்சி சங்கிலியாண்டபுரம் 27-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசமர பஸ்ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சோழைராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, பாலக்கரை பகுதி செயலாளர் சிவகுமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-
திருச்சி சங்கிலியாண்டபுரம் 27-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான பாரதி நகர் மெயின் ரோடு , 3 வது தெரு , 5 வது தெரு , கோவிந்த கோனார் முதல் மற்றும் 3 வது தெரு இளங்கோ தெரு , அப்துல் குத்தூஸ் தெரு , முத்தையா சுவாமி தெரு பட்டி கோனார் தெரு மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் சாலையை சரி செய்திடக் கோரியும், மணல்வாரித்துறை ரோட்டில் உள்ள சுடுகாட்டில் மாலை பொழுதில் தகன மேடையில் இறுதிச் சடங்கை மேற்கொள்ள போதிய ஒளி வசதி இல்லாததால் மின் விளக்கு அமைத்திடக் கோரியும், பாரதி நகர் பகுதியில் கேபிள் கட்டணத்தை சீர் செய்திடக் கோரி
பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், எம்எல்ஏ மற்றும் அமைச்சர் என அனைவரிடமும் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஷாஜகான், ராஷீலா பானு, ரெட்டமலை, சீனி, கிருஷ்ணா, லோகேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.