திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு பகுதியான திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் கிழக்கு தெற்கு மேற்கு விஸ்தரிப்பு என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் பல ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அன்மையில் பாதாள சாக்கடை பணி செய்வதற்காக சாலையை தோண்டியது.
இதுநாள் வரை பணிகள் முடிக்கப்படாமல் தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வருவதால் அப்பகுதியில் ஒரு சிறு மழை பெய்தால் கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடும்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அவல நிலைக்கு உள்ளாகி விடுகின்றனர். தற்பொழுது நேற்று முன்தினம் பெய்த சிறியமழையில் அப்பகுதி சாலைகள் முழுதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் பொதுமக்கள் அப்பகுதியில் யாரும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி காட்டூர் அம்மன் நகர் நல சங்க முன்னாள் நிர்வாகி டாக்டர் விஸ்வநாதன் கூறுகையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்துவதோடு உடனடியாக இப்பகுதியில் சாலை வசதிகளை பருவ மழை வருவதற்கு முன்பாகவே அமைத்துத் தரதிருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.