திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டில் காலியாக உள்ள மனைகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக விஷ பாம்புகள் அதிகமாக தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள் உலாவி வருவதை கண்ட பொதுமக்கள் மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முட்புதர்களில் பதுங்கி இருந்த விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்புவை லாவகமாக பிடித்தனர்.
மேலும் காலி மனைகளில் வளர்ந்துள்ள முட்புதர்களை மாமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் சீரிய முயற்சியில் பொக்லின் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மாமன்ற உறுப்பினரின் இத்தகைய செயலுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
காலி மனை உரிமையாளர்கள் அவர்களின் மனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி காலிமனை உரிமையாளர் களுக்கு மாமன்ற உறுப்பினர் செந்தில் அறிவுரை வழங்கினார்