தமிழக சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் ஆலோசனை கூட்டம் பேராலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தற்போது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் தேர்தல் மற்றும் பல்வேறு நிர்வாக குளறுபடி காரணங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்பூர் மாவட்ட குலசேகரத்தில் போதகர் அசோக்குமார் ஆயரை ஆதரிக்கின்ற ஒரு அணி, ஆட்சிமன்ற குழுவை ஆதரிக்கிற ஒரு அணி என இரு அணிகளாக தற்போது செயல்பட்டு வருகிறது. இருதரப்பிலும் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும்பான்மை யானவர்களை புறக்கணித்து விட்டு அவர்களை ஆதரிப்பவர்களை வைத்து தேர்தலை நடத்த முயற்சிக்கிறார்கள். அதை முற்றிலும் தவறானது திருச்சபையின் மரபுக்கு, விதிகளுக்கும் எதிரானது. புதிய பேராயர் தேர்வு செய்யப்பட்டால் தற்போது இருக்கும் பேராயர் தான் அவரை அருட்பொழிவு செய்ய வேண்டும். அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மேலும் விசாரணை குழு அமைத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக எந்த எழுத்துப் பூர்வமான கடிதமும் எந்த சபைக்கும் வரவில்லை. இது பொய்யான தகவல். பேராயருக்கும் தேர்தல் நடத்த வேண்டும், நிர்வாக குழு தேர்தல் நடத்த வேண்டும்.
200 பேர் கொண்ட குழு கமிட்டியின் மூன்று முறை ஆலோசனைக்குப் பின்னரே ஆயர் மட்டுமல்ல அனைத்து ஆயர்களின் வயது 67 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. உண்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீதிமன்றம் சென்று இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து சமாதான அறிக்கை ஒன்று கொடுத்துவிட்டு ஆலோசனைக் சங்கத்தை பேராயரரையும், தேர்வு செய்யலாம் இது நல்ல முயற்சி. தன்னிச்சையாக செயல்பட்டால் இப்படிப்பட்ட தேர்தலில் நாங்கள் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.