தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆறாவது மாநில நிதி ஆணையம் 2025 2026 இன் கீழ் திருச்சி மாவட்டம் திருவரம்பூரில் ரூபாய். 6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மேயர் அன்பழகன் பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி துணை மேயர் திவ்யா மண்டல தலைவர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவரைத் தொடர்ந்து நிருபர்கள் அளித்த பேட்டியில் அமைச்சர் கே என் நேரு கூறியதாவது:- மத்திய அரசு மாநில அரசை ஒடுக்குவதற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துவது போல் சென்சார் துறையை பயன்படுத்தி வருகிறது என முதல்வர் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு? தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்டு வாயை பிடுங்கி நாள் முழுவதும் அடிக்க பார்க்கிறீர்களா என்ற நகைச்சுவையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்