கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவித்து வரும் திரைப்பட தொழிலாளர்கள் மூவாயிரம் பேருக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார் கன்னடத் திரைப்பட நடிகர் யாஷ்.கேஜிஎஃப் படத்தில் நடித்து இந்தியளவில் மார்க்கெட்டை பிடித்தவர் கன்னட நடிகர் யாஷ். கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரைத்துறை முடங்கியுள்ளது. இதை நம்பியே இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வருமானங்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.இதனால் தமிழ் சினிமா உட்பட பல்வேறு திரைத்துறைகளில் பிரபலமான நடிகர் நடிகையர்கள் பலர் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் ஃபெப்சி அமைப்புக்கு நிதியுதவி அளித்தனர்.
அதேபோன்று கன்னட சினிமாத்துறையச் சேர்ந்த மூவாயிரம் தொழிலாளருக்கு தனித்தனியாக ரூ. 5000 அவரவர் வங்கி கணக்குகளில் சென்று சேருவதற்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி செய்துள்ளார் கன்னட நடிகர் யாஷ்.இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நம் நாடு முழுவதும் பலருடைய வாழ்வாதாரத்தை கொரோனா முடக்கிவிட்டது. கன்னட திரைத்துறையை பணியாற்றும் தொழிலாளர்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 1.50 கோடி நிதியுதவி நாம் இருக்கும் சூழ்நிலைக்கு இழப்பாக இருந்தாலும், அவர்கள் வலிகளுக்கு தீர்வாகாது என்று அவர் கூறியுள்ளார்