திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் பயணிகள் குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டும் வகையில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலம் துணை மேலாளர் புகழேந்திராஜ் பேருந்து நிலைய மேலாளர் சேகர் ஓட்டுநர் போதகர்கள் தாய் நேசம் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஹெப்சி சத்தியா ராக்கின் மாற்றம் அமைப்பை சேர்ந்த விளையாட்டு பிரிவு செயலாளர் சுரேஷ் பாபு வழக்கறிஞர் சதிஷ் ஜான் ஓவியர் ஜெயகுமார் சரண் சந்தோஷ் பிரபு சந்தியா மாற்றம்

அமைப்பின் நிறுவனர் தலைவரும் தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட்டோர் கலந்து கொண்டு தீப ஒளி திருநாளில் பாதுகாப்பாக பட்டாசுக்களை எப்படி வெடிப்பது தீ தடுப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களை எப்படி மீட்பது முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்கள் சிறுவர்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்