நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் தீபாவளி பண்டிகை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அதிக அளவில் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.
ரயிலில் பயணிக்கும் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பட்டாசுகள் பெட்ரோல் மண்ணெண்ணெய் ஆயில் பெயிண்ட் கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயகரமான பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவுகள் 67, 164 , 165 படி தண்டனைக்குரிய குற்றமாகும் அதற்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீசார் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகளின் உடைமைகளை மோப்பநாய் , வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ரயில்கள் பிளாட்பார்மில் நின்றவுடன் அதில் ஏறி உள்ளே சென்ற போலீசார் மற்றும் ஆர் பி எப் வீரர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்களை யாரும் எடுத்துச் செல்லாதீர்கள் என கேட்டுக் கொண்டனர் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை புடவை அல்லது சாலால் மறைத்த படி கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.