திருச்சி உறையூர் புது பாய் கார தெரு பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 38), இவரது கணவர் குமார் (வயது 42), இவர் உறையூர் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பணத்தை கொடுத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 2023 வருடத்திற்கு போடப்பட்ட தீபாவளி பண்டு சீட்டு பணத்தை யாருக்கும் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. மாதம் 500 ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 6000 ரூபாய் செலுத்தினால் போனசாக 1000 ரூபாய் சேர்த்து மொத்தம் 7000 ரூபாயாக தீபாவளி அன்று தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தீபாவளி பண்டு சீட்டில் முதலீடு செய்துள்ளனர்.

இதனை அடுத்து பாக்கியலட்சுமி இந்த வருட தீபாவளிக்கு பண்டு சீட்டு பணத்தை திருப்பி தரவில்லை எனவும், இது குறித்து அவரை தேடி அவரது வீட்டில் சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை எனவும், தொடர்ந்து அவர் பணி புரியும் பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்த்த போதும் கடந்த பத்து மாதங்களாக இங்கு வரவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து தொடர்ந்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களது பணத்தை மீட்டு தர கோரி திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி முகாமில் ஏராளமான பெண்கள் புகார் மனு அளித்தனர். தாங்கள் மட்டுமின்றி ஏராளமானோர் இவர்களிடம் முதலீடு செய்துள்ளனர் எனவும் இவர்கள் தலைமறைவாக இருப்பதால் தாங்கள் மூலம் இந்த தீபாவளி பண்டு சீட்டில் இணைந்தவர்கள் பிரச்சனை செய்கிறார்கள், உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *