திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..
12 அடி உயரமுள்ள அஜித் பேனருக்கு பேப்பரால் ஆன மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து வெகு சிறப்பாக கொண்டாடினர்.
மேலும் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து நடனம் ஆடி அஜித் என் கடவுள் கடவுள் அஜித் என கோஷங்கள் எழுப்பி கொண்டாடினார்கள் இதனைத் தொடர்ந்து வான வேடிக்கை பட்டாசுகள் வெடித்தும் சாலை நடுவே நடனமாடியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.