திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்கள் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நாய் கடிக்கு உள்ளாவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை மேற்கொள்ளும் பணிகளும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது,
இந்நிலையில் இன்று திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அம்பேத்கார் நகர் சுடுகாடு வளாக பகுதியில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தினை மாநகராட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்து அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்…
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல குழு தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..