தலைநகர் டெல்லியில் 75 வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வீர்கதா 3.0 சூப்பர் 100 என்கிற தலைப்பில் ஜான்சிராணி அவர்களின் படத்தினை வரைந்து வெற்றி பெற்ற மாணவி கயல்விழி மற்றும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர் தமிழ் வேந்தன் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமாரை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

மேலும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி, காவல்துறை துணை ஆணையர் செல்வகுமார், காவல்துறை துணை ஆணையர் அன்பு , உதவி ஆணையர் நிக்ஸன் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் , தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவர் சிவசங்கர், பெட்காட் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் முனைவர் கார்த்திக், தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹப்சி சத்தியாராக்கினி

சமூக செயற்ப்பாட்டாளர்கள் கோவிந்தசாமி , ஆர்ம்ஸ்ட்ராங் ராபி ஒயிட் ரோஸ் சமூ நல அமைப்பின் தலைவர் சங்கர்,பெட்காட் மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன் தின சேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகி சிவபிரகாசம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் கவுரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் அண்ணாதுரை

தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் மாணவர்கள் பயிலும் செயின்ட் ஜேம்ஸ் பள்ளியின் தாளாளர் தாமஸ் பள்ளியின் முதல்வர் ஜாக்குலின் இம்மாகுலேட் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் சுரேஷ் விவேக் சரண்யா ஆங்கில ஆசிரியர் ஜோஸ்பின் கிளின்ஸி மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *