மேகதாது-வில் அணைகட்ட கூடாது என்பதற்காகவும், 100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், கூட்டுறவு சங்கங்களில் *Scale of finace* அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை VAO வழங்கும் அடங்கல் சான்றிதழ்படி வழங்க வேண்டும் என்பதற்காகவும், 500 ஏக்கருக்கு ஒரு *DPC*-யும் (அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்), ஒரு நாளைக்கு 3000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதல் செய்யும் நெல்லுக்கு விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட கூடாது என்பதற்காகவும், 2016-ல் விவசாயிகள் வாங்கிய குறுகியகால கடனை மத்தியகால கடனாக மாத்திவைத்துள்ளதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினால் மட்டுமே VAO குத்தகைதாரருக்கு அடங்கல் வழங்க கூடாது என்று சொல்லலாம் ஒளிய வெறும் வழக்கு தொடுத்தால் மட்டும் வழங்க முடியாது என்று மறுக்க கூடாது என்பதற்க்காகவும், காட்டு மிருகங்கள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும், காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மலம், சிறுநீரை காவிரியில் கலக்காமல் தடுக்க வேண்டும், காவிரியில் வீணாக கலக்கும் வெல்லநீரை வைகை-குண்டாற்றை இணைக்கும் திட்டத்தை நிறுத்தாமல் செயல்படுத்த வேண்டும்,
காவிரி வெல்லநீரை காவிரி-அய்யாறு உடனும் இணைக்க வேண்டும் என்பதற்க்காகவும், மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையில் பெய்யும் மழைநீரை ஆழடியாறு அணையில் தேக்கி கேரளா வழியாக அரபி கடலில் கலப்பதை தடுத்து ஆழடியாரில் துளையிட்டு மணப்பாறை தாலுக்காவில் உள்ள பொன்னனியாறு டெமிக்கு கொண்டு வந்து மணப்பாறை, மருங்காபுரி தாலுக்காவையும் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களை வளம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்க்காகவும், பச்ச மலையில் பெய்யும் மழைநீரை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மலையாளப்பட்டியில் சின்னமுட்டுலு என்ற இடத்தில் அணைகட்டி பெரம்பலூர் மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும், காட்டு கருவைமுள்களை எல்லாம் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவிட்டு அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆலோசிக்கும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் 9 டெல்டா மாவடங்களான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் *டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு* தலைமையில் இன்று அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தஞ்சை மஹேந்திரன், ஒரத்தநாடு தங்கமுத்து, முசிறி கார்த்திகேயன், கடலூர் சாதுக்கூடல் சக்திவேல், திருச்சி மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, நகர் ஜான் மெல்கியோராஜ், அரியலூர் பாண்டியன், சிறுகம்பூர் பரமசிவம், திருவாரூர் கக்கரை மனோகரன், புதுக்கோட்டை முருகேசன், லால்குடி தியாகு, மாநில செய்தி தொடர்பாளர்கள்.பிரேம்குமார், வரபிரகாஷ், சட்ட ஆலோசகர்கள் முத்துகிருஷ்ணன் வழக்கறிஞர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வாலையூர் பொன்னுசாமி, அரியலூர் ஆண்டவர், புதுக்கோட்டை ஐயப்பன், ரவி மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.