திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை ரகங்களை ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட ஏற்றுமதி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் வாழை வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வாழை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
இது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி கூறும்போது: இந்தியாவில் ஏறக்குறைய 30 மில்லியனும் தமிழகத்தில் 4 மில்லியனும் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 20 வகையான வாழை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன
இந்த கூட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த பிரச்சனைகள் மற்றும் அரசிடமிருந்து எதிர் பார்க்கப்படும் சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலக அளவில் பச்சை வாழை ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறுகிறது இந்தியாவில் நமது ஆராய்ச்சி மையம் மூலமாக நேந்திரம் மற்றும் செவ்வாழை போன்றவைகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்தோம் அதில் வெற்றி அடைந்தோம் என்றார்