நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை சென்னை ராயபுரத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களின் இந்த திட்டம் தொடங்கப்பட்டது அதே போல திருச்சி மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது இதில் மாவட்ட ஆட்சி தலைவர் சிவராசு , மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மாநகராட்சி அதிகாரிகள், மகளீர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் அனைவரும் என் நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்வேன் என உறுதி மொழி ஏற்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகரங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும்,மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும், தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை மஞ்சள் நிற தொட்டியில் என்று பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..