திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியிட இருக்கும் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் திருச்சி சோனா திரையரங்கு வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

இந்த வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் கலந்துகொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் ஸ்டிக்கரை வெளியிட திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் ராயல் ராஜ், எஸ்.டி. ராஜ், உதயன், காமராஜ், கண்ணன், பாபு, நோபல்அலெக்ஸ், மற்றும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்