தமிழக திரைப்பட நடிகர் தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் 38வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாப்பா குறிச்சியில் ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைவர் மணிகண்டன் தலைமையில் இன்று நடைபெற்றது.

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நலத்திட்ட விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தளபதி விஜய் மக்கள் இயக்க தெற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் கலந்துகொண்டு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை ஏற்றி வைத்து கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து

 பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு குடங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி முதியோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் ரகுநாதன் துணைத் தலைவர் பாலாஜி துணை செயலாளர் ராஜ்குமார் பொருளாளர் தேவசூர்யா கௌரவ தலைவர் முருகேசன் இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்