தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை கல்லி கழகம் சார்பில் ஆசிரியாகளுக்கான கல்வித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி டிஇஎல்சி ஷாலோம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தரங்கை அத்தியட்சர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை செயலாளர் தங்கபழம், கல்விக்கழகம் மேல்நிலைத் கல்வி தலைவர் மறைதிரு. குணாளன் பாக்கியராஜ், கல்விக்கழகம் தொடக்க கல்வி தலைவர் ஆண்ட்ரூஸ் ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் கருத்தரங்கில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்:- தமிழகத்தில் இன்றைக்கு ஒன்பது லட்சம் பேருக்கு மேல அரசு ஊழியர்கள் இருக்காங்க கிட்டத்தட்ட 34 35 அமைச்சர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னால் இரண்டு லட்சத்திலிருந்து 3 லட்சம் பேர் என்னுடைய ஒரு துறையை சார்ந்த அரசு ஊழியர்கள் ஆக எப்படி இருக்கும்பொழுது உங்களுக்கு தெரியும் அதற்கு அன்று பல பாராட்டுக்கள் வருவதாக இருந்தாலும் சரி, அல்லது என்னுடைய ஆசை பெருமக்கள் மூலமாக எங்களுக்கு வருகின்ற விமர்சனங்கள் ஆக இருந்தாலும் ரசிக்க கூடியவர்கள் நாங்கள்…
ஒரு நல்ல அரசாங்கத்தை ஒரு நல்ல முதலமைச்சரை வழங்கிய இறைவனுக்கு நன்றி என்று பேராயர் சொல்லும் பொழுது எங்களுக்கு இந்த இடத்தை வழங்கியவர்கள் யார் என்று சொன்னால் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த உங்களுடைய பங்கு தான் அதில் அதிகம் என்பதை என்றைக்குமே நாங்கள் நினைவு கூறக் கூடியவர்கள் நாங்கள் என பேசினார்.