புதுச்சேரியில் நாளை முதல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியதுடன் மதுபான கடைகளைத் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டு மக்கள் எதிர்கொண்டதை விட இந்த ஆண்டு பாதிப்பு மோசமாக உள்ளது. எனவே நோய்த் தொற்றை கட்டுப்பட்டுத்த பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன..இதன் விளைவாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.. சராசரியாக ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்த நிலையில் தற்போது 1 லட்சம் என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது..
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது நோய்த் தொற்று ஓரளவு குறையத் தொடங்கியதால் பல மாநிலங்கள் ஊரடங்கில் பல புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளன.
அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிய தளர்வுகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.. இதனால் புதுச்சேரியில் நாளை முதல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.