திருச்சி மாவட்டத்தில் பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை என்று செய்திகள் வந்துள்ளது – அரசு பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம், இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,புத்தகங்கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைக்கும்.நீட் தேர்வுக்கு தகுதியான, முறையான பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.செல்போன் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் ஆன்லைன் வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மை தான் – கண்டிப்பாக குழந்தைகளுக்கு பயிற்சி செல்ல ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது கவலை அளிக்கிறது – சட்டப் போராட்டம் நடத்தி இதனை எதிர் கொள்வோம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் …