அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தில்லை நகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் மலைக்கோட்டை ஐயப்பன்,கே.சி.பரமசிவம், வனிதா, பத்மநாதன், பூபதி,நாகநாதர் பாண்டி, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி பெருமாள், சிந்தாமணி முத்துக்குமார், டாக்டர் செந்தில்குமார், தொழிலதிபர் என்ஜினீயர் இப்ராம்ஷா ஆகியோர் வரவேற்றனர்.கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ்,அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநிலஇணை செயலாளர் சீனிவாசன்,தலைமை கழக பேச்சாளர்கள் சுந்தரம், இட்டேரி யூசுப்,மாவட்ட மாணவர் அணி செயலாளர்,ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நல்லுச்சாமி, நிர்வாகிகள் ஜாக்குலின், அன்பழகன், சுரேஷ்குப்தா,, பாலக்கரை சதர், தென்னூர் அப்பாஸ், கவுன்சிலர்கள் அம்பிகாபதி,அரவிந்த்ன், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்’