திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்’ இரண்டாம் கட்டத் திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு 1730 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

1730 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கபட்டுள்ளது. மராமத்து பணிகள் நடைபெற்று வரும் காவிரி பாலம் இன்னும் 15 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பருவம் தவறிய மழையால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் 81ஏக்கர் மட்டுமே கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்